யுக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, பெலாரஸ் நாட்டில் உயர் கல்வியைக் கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசனை வழங்கியுள்ளார.
பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் கற்கும் சுமார் 1,500 பெற்றோர்களின் ஒன்றியத்தினர் இன்று முற்பகல், பிரதமரை சந்தித்துள்ளனர்.
இதன்போது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கும், மொஸகோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கும் பிரதமரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவாரர்த்தை நடத்தி, கற்றல் நடவடிக்கைகளை சில வாரங்களினால் தாமதப்படுத்துதல் மற்றம் ரஷ்ய விஸா அனுமதிப்பத்திரத்தைப் பெற்று, குறித்த மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.