இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையில் தங்கியுள்ள யுக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கு இடையே, முரண்பாட்டு நிலை ஏற்பட்டால், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல்துறைக்கு அறியப்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.