அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரைன் இராணுவமும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்நிலையில், யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய இராணுவம் இன்று 7வது நாளாக யுக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உட்பட 11 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி ஐ.நாவினால் தடை விதிக்கப்பட்டுள்ள வேக்கூம் வகை குண்டுகளைப் பயன்படுத்தி, ரஷ்யா தாக்குதல் நடத்துவதன் மூலம் போர் குற்றங்களைப் புரிவதாக உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும், இதனை ரஷ்யா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.