Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் சுகாதார சேவையாளர்கள்!

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் சுகாதார சேவையாளர்கள்!

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், நாளை (02) முதல் 2 நாட்களுக்குத் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகச் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles