Tuesday, September 17, 2024
29 C
Colombo

விளையாட்டு

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றம்

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவின் கால்பந்தாட்ட அணிகளுக்கு சர்வதேச போட்டிகளில் மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம மற்றும் ஃபீஃபா என...

நெஸ்லே – மைலோ நீர்கொழும்பில் கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாம்

March 1, 2022 - 3:52pmவிளையாட்டுசிறுவர்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு அவர்களுக்கு ஊட்டமளிக்கும் நெஸ்லே - மைலோ, இலங்கை கரப்பாந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ஆசிய மத்திய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில், கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. 'விளையாட்டு ஒரு சிறந்த ஆசிரியர்' என்ற நெஸ்லே- மைலோவின் நம்பிக்கைக்கு இணங்க, இந்த கடற்கரை கரப்பந்தாட்ட முகாம் வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் குறித்த பயிற்சியை வழங்கியது. மாணவர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவாக நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலைகளுக்கு கடற்கரை கரப்பந்தாட்ட உபகரணங்களை வழங்கி இந்நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த உபகரணங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் வழங்கி வைத்தனர் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

ரஷ்ய, பெலாருஸ் விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை

March 1, 2022 - 11:28amவிளையாட்டுரஷ்யா மற்றும் பெலாருஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்குமாறு சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாருஸ் ஆகிய நாடுகள் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் பெலாருஸ் நாட்டுப் பிரதிநிகளாக அந்நாட்டு விளையாட்டு வீரர்களோ, விளையாடு அதிகாரிகளோ பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் குழு பரிந்துரைத்துள்ளதுடன், ரஷ்யா அல்லது பெலாருஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாக பங்குபற்றும் நிலையில் அவர்களை இணைக்க அனுமதிப்பதுடன், அந்நாடுகளின் தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது என அக்குழு தமது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்பான செய்திகள்: 11,463 ரஷ்யர்கள், 3,993 உக்ரைனியர்களின் வீசா கட்டணமின்றி நீடிப்பு lead Tags: சர்வதேச ஒலிம்பிக் குழுரஷ்யாஉக்ரைன்உக்ரைன் மோதல்பெலாருஸ்தடைInternational Olympic CommitteeRussiaUkraine CrisisUkraineBelarusBanSend Push Notification: No Share

கார்லிங் கிண்ணம்: ஒன்பதாவது முறையாக சம்பியனானது லிவர்பூல் அணி

March 1, 2022 - 9:26amவிளையாட்டுகால்பந்து கூட்டிணைவுக் கிண்ணத் (கார்லிங் கிண்ணம் - லீக் கிண்ணம்) தொடரின் இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.இந்த சம்பியன் பட்டத்தின் மூலம் கார்லிங் கிண்ணத் தொடரில் ஒன்பதாவது முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவே இத்தொடரில் அதிகபட்ச சம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியின் சாதனையாகும். வெம்ப்ளி விளையாட்டரங்களில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணியும் செல்சியா அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11–10 என்ற பெனால்டி ஷூட்-அவுட் முறையில் லிவர்பூல் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முன்னதாக, 1980-81, 1981-82, 1982-83, 1983-84, 1994–95, 2000-01, 2002–03, 2011–12ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1977-78, 1986-87, 2004-05, 2015-16ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணம்: ஹொராப்பொல கிரிக்கெட் அணி சம்பியன்

March 1, 2022 - 8:44amவிளையாட்டுபலளுவெவ ரொலக்ஸ் விளையாட்டுக்கழகம் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்த அணிக்கு 11 பேர் கொண்ட ஆறு ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இம்மாதம் 20 ஆம் திகதி பலளுவெவ ரொலக்ஸ் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டி தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டதுடன் முதல் சுற்று லீக் முறையில் இடம்பெற்றது. நான்கு குழுக்களாக ஒரு குழுவில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டித் தொடர் இடம்பெற்றதுடன்,அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேகம நிவ் ஸ்டார் அணி,கெகிராவ ஒரியன்ஸ் அணி, ஹொராப்பொல யூனைடட் அணி,கட்டுகெலியாவ கே.சீ.சீ.அணி என்பன தகுதி பெற்றதுடன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நேகம நிவ் ஸ்டார் அணி ,ஹொராப்பொல யூனைடட் அணி என்பன இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றது.இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேகம நிவ் ஸ்டார் அணி ஆறு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொராப்பொல யூனைடட் அணி ஐந்து ஓவர்களில் 56 ஓட்டங்களை ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பெற்றதுடன் ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணத்தையும் ரூபா 30000 பணப்பரிசினையும் ஹொராப்பொல யூனைடட் அணி சுவீகரித்துக் கொண்டது. (கல்நேவ தினகரன் விசேட நிருபர்) Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News