Sunday, September 14, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்

March 1, 2022 - 9:24amஉள்நாடுஅங்கஜன் ராமநாதன் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி  மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் வௌியிட்டுள்ள மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன்.   அறிந்தோ- அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்திரி விரதத்தை இந்துமக்கள் அனுஷ்டித்தால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.   “நமசிவாய” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது. இந்த நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப்பயனை அடைய வேண்டும்.   இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி, மத, இன, நிற வெறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ- இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களையே இந்த உலகம் போற்றும்.   சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.     Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

மேல் மாகாணத்தில் 1,188 பேர் தற்காலிகமாக தங்கியிருப்பு

March 1, 2022 - 9:04amஉள்நாடுதகவல்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார் மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11,188பேரின் தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மேல் மாகாணத்திற்கு வந்து தங்கியுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களில் 20 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மாகாணத்தில் உள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்தத் தகவல் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

இரு மாதங்களில் வீதி விபத்துகளில் 457 பேர் உயிரிழப்பு!

March 1, 2022 - 10:26amஉள்நாடுஇவ்வருடத்தின் இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 434வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதில் 457 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

Popular

Latest in News