Friday, November 15, 2024
31 C
Colombo

உள்நாட்டு

கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 1, 2022 - 6:00amஉள்நாடுஜனாதிபதி அக்கறையாக உள்ளதாக டக்‌ளஸ் தெரிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய கடற்றொழிலாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக உள்ளார். இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.       Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

நான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுமூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் 3 ஆவது டோஸ் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்முறை விரைவுபடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸிற்கான கொள்முதல் உத்தரவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என வினவிய போது, அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும் தடுக்கும் ஒரே வழி இலங்கையர்களிடையே பூஸ்டர் டோஸ் அல்லது 3ஆவது டோஸ் கொண்ட மெதுவான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார். முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 168,96,733 பேரில் 71,39,133 கொவிட் 19 நோயாளிகளுக்கு மாத்திரமே பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றாத மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரமான வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் அமைப்பை அமைக்க 3 வது டோஸ் அவசியம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்னும் நான்காவது டோஸை பரிந்துரைக்க உள்ள போதிலும், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். “30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் சரியான நேரத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெற்றால், எதிர்வரும் மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

விசேட ஜனாதிபதி விசாரணை ஆ.கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

March 1, 2022 - 6:00amஉள்நாடுராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின. நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார். அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுகொள்வனவு செய்யவுள்ள எரிபொருள் குறித்த திகதியில் நாட்டை வந்தடையும்   வழமையை விட அதிகளவு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான வாகன வரிசையை காண முடிவதாக வலு சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அணி திரள்வது அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் மற்றும் அதற்கான விலையதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் தமது வாகனங்களின் எரிபொருள் தாங்கியை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாக செயற்படுவதாலேயே நீண்ட வரிசையை காண முடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் இது அறுவடைக் காலம் என்பதால் இயந்திர உபகரணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு செய்யப்படவுள்ள எரிபொருள் எந்தவித தாமதமும் இன்றி குறித்த திகதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ள அவர். அதற்காக செலுத்தவேண்டிய டொலர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பொது போக்குவரத்து களுக்காக எரிபொருளை வழங்குவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலே எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்

March 1, 2022 - 9:24amஉள்நாடுஅங்கஜன் ராமநாதன் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி  மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் வௌியிட்டுள்ள மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன்.   அறிந்தோ- அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்திரி விரதத்தை இந்துமக்கள் அனுஷ்டித்தால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.   “நமசிவாய” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது. இந்த நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப்பயனை அடைய வேண்டும்.   இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி, மத, இன, நிற வெறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ- இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களையே இந்த உலகம் போற்றும்.   சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.     Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News