March 2, 2022 - 6:00amஉள்நாடுகிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் (28) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
நேற்று முன்தினம்(28-) பிற்பகல் சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரத்தை சேர்ந்த கந்தையா நவ சீலன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தொழில் நிமித்தம் சம்பவிடத்திற்கு அருகில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் அறியமுடிகின்றது. கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.-
(பரந்தன் குறூப் நிருபர்)
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
March 2, 2022 - 12:00amஉள்நாடுதரவிறக்கம் செய்ய: கிளிக் செய்க
PDF File: http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/03/01/Thinakaran-e-Paper-01-03-2022.pdf
தொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: பெப்ரவரி 28, 2022இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: பெப்ரவரி 27, 2022இன்றைய தினகரன் e-Paper: பெப்ரவரி 26, 2022
lead
video
Tags: பத்திரிகை செய்திe-PaperThinakaranSend Push Notification: No
Share
March 1, 2022 - 5:22pmஉள்நாடுநாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மலையகத்திலும் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்துக்கிடந்தன.
நுவரெலியா மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாட்டினையடுத்து வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் எண்ணெய் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் சில கிலோமீற்றர் தூரம் வரை வாகன வரிசை காணப்பட்டதுடன் எரிபொருளின்றி இடையில் நின்ற வாகனங்களுக்கு டீசல் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர்.
ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதேநேரம் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த பல வாகனங்கள் டீசல் இன்றி வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றையதினம் அதிகமான எண்ணெய் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஹற்றன் விசேட நிருபர்
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
March 1, 2022 - 4:48pmஉள்நாடுவெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று (01) முற்பகல் வெல்லவாய, எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மாணவர்கள் சிலரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புத்தல பிரதேச உயிர்காப்புக் குழுவினரின் உதவியுடன் வெல்லவாய பொலிஸார் இவர்கள் இருவரினதும் சடலங்களை இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய 21 வயதான அப்துல் லெத்தீப் அயாஸ் (21) மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 22 வயதான அமீன் ரிபாத் ஆகிய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
lead
Tags: மூழ்கி மரணம்பலிஅக்கரைப்பற்றுஎல்லேவல நீர் வீழ்ச்சிDrownDeadAkkaraipattuEllewala WaterfallSend Push Notification: No
Share
March 1, 2022 - 6:14pmஉள்நாடுநாளையதினம் (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய - மு.ப. 8.00 - பி.ப. 1.00 மணி வரை - பி.ப. 1.00 - பி.ப. 6.00 மணி வரை முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்
- பி.ப. 6.00 - பி.ப. 8.30 மணி வரை - பி.ப. 8.30 - பி.ப. 11.00 மணி வரை இரண்டாம் கட்டத்தில் 2.30 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
PDF File: http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/03/01/E-02-03-2022-Power-Interruption-Schedule.pdf
தொடர்பான செய்திகள்: மார்ச் 01 : அனைத்து வலயங்களிலும் ஒரே கட்டத்தில் பகல் வேளையில் 3 மணித்தியால மின்வெட்டுபெப்ரவரி 28 மின்வெட்டு: ABC: 4 மணித் 40 நிமிடங்கள்; PQRSTUVW: 5 மணித் 15 நிமிடங்கள்வார இறுதி நாட்களில் இரவில் மின்வெட்டு இல்லை; அட்டவணை வெளியீடு
lead
Tags: மின்வெட்டுமின் வெட்டுஇலங்கை மின்சார சபைஇ.மி.ச.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஜனக ரத்நாயக்கஎரிபொருள் பற்றாக்குறைPower CutPower CrisisPCUSLCEBJanaka RatnayakeFuel ShortageSend Push Notification: No
Share