March 1, 2022 - 2:22pmஉள்நாடுநீதியமைச்சர் அலிசப்ரி கருத்து வெளியீடு
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நெப்போலியன் என்று அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸை நாடு கடத்துவது பற்றி இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கில், லண்டனில் கடந்த 22ஆம் திகதி நெப்போலியன் கைதானார்.
போர்க்குற்ற எதிர்ப்புப் பொலிஸாராலே அவர் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.அவரைச் சர்வதேச பொலிஸார் ஊடாகக் கைது செய்யும்படியும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட நெப்போலியன் நாடு கடத்தப்படுவாரா என்று நீதி அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
அவர் கைது செய்யப்பட்ட தகவலை ஊடகங்களில் பார்த்தேன். அவரை இலங்கைக்கு நாடு கடத்துவது பற்றி இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரையான எட்டு மாத காலப்பகுதிக்குள் 1.8 மில்லியன் பெற்றோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், அதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை...
March 1, 2022 - 1:20pmஉள்நாடுகொழும்பு சிறுவர் வைத்தியசாலை
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெரும்பாலான சிறுவர்களின் பெற்றோர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெருமளவிலான சிறுவர்களின் பெற்றோரும் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி வைத்தியசாலையில் தொடர்ந்து முப்பது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலையில் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தாம் அத்தகைய பெற்றோர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் மூலம் பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றுவது அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான பெற்றோர்களில் சிலர் ஒரு தடுப்பூசியையாயினும் இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் ஏன் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என அவர்களிடம் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேற்படி வைத்திய சாலையில் 3வார்டுகளில் சிறுவர்கள் தங்கியிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும்...
15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்திய பிரஜைகள்...