Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டி தீக்கிரை

வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டியொன்று இன்று (02) காலை 5.30 அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் காலி - தல்கம்பல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இந்த சம்பவத்தினால் குறித்த முச்சக்கர...

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரத்தை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...

உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணிகள் ஆரம்பம்

March 2, 2022 - 6:00amஉள்நாடுவெளிவிவகார அமைச்சு நடவடிக்கை உக்ரைனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இந்த நோக்கத்துக்காக, உக்ரைனிலுள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வசதியளிக்கப்பட்டு வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வெளியேற்றும் செயன்முறையை திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, வோர்சோவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது. உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும் வழிவகை செய்கின்றனர். உகரைனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக் கண்காணிப்பதிலும் வெளிநாட்டமைச்சு ஈடுபட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். பெலாரஸிலுள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது. இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில் உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். அவசியமான சந்தப்பங்களில், வழக்கமான நிலைதொடர்பில் புதிய தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்திலுள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுள்ளது. Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் உள்ளிட்ட இருவர் மரணம்

March 2, 2022 - 7:54amஉள்நாடுதிருகோணமலை - உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் எனும் 15 வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த டி.டபிள்யூ. திசறு அமீக்ஷண எனும் 20வயது சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் சடலங்கள் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். (ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல் சலாம் யாசீம்) lead Tags: விபத்துபலிசிறுவன் பலிமரணம்உவர்மலைதிருகோணமலைAccidentMotorcycleDeadDeathBoy DeadUvarmalaiTrincomaleeSend Push Notification: No Share

Popular

Latest in News