நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்...
ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டின் மீது குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குருணாகலில் உள்ள அவரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவரின் வீட்டுக்கு பலத்த சேதம்...
அரச ஊடக நிறுவனங்களான ரூபவாஹினி மற்றும் ITN என்பன பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன், இன்று இடம்பெற்ற கலகம் தொடர்பில் செய்தி வெளியிட முடியாமல் போனமை குறித்து வருந்துவதாக அந்நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.