நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் மக்கள் அதிக வாழும் குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் பலத்த இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து பிரதான வீதியை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட பிரபுகளின் வீடுகளுக்கு இராணுவம மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் எவரும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளறுள்ளதாகவும், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தொலைபேசிகளை துண்டித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறியதுடன், கொழும்பு 7இல் உள்ள தனது இல்லத்தில் இருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.