கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தை எப்படி அமைப்பது என்பது குறித்து இதன்போது கலந்துரையாடினோம்.
இதற்கு கட்சித் தலைவர்களே முழுப் பொறுப்பு.
கட்சித் தலைவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்காமல் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.