Tuesday, June 30, 2026
28.4 C
Colombo
அரசியல்மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்டாதீர் - சரத் பொன்சேகா

மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்டாதீர் – சரத் பொன்சேகா

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை கேட்டுக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிபொருள் நிலையத்தில் நபர் ஒருவரை உதைத்த இராணுவ அதிகாரி உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான முறையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உரிய நடவடிக்கை எடுத்து, இராணுவத் தளபதி, இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles