சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தாம் உடன்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனையே ஜனாதிபதி தன்னிடமும் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.