Thursday, August 7, 2025
26.1 C
Colombo
அரசியல்ஜனாதிபதியை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்ப தயார் - வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதியை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்ப தயார் – வாசுதேவ நாணயக்கார

முழு நாடும் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால், ஜனாதிபதிக்கு தற்போது மக்களின் ஆதரவு இல்லை. இந்த நிலையில், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நாட்டில் காணப்படும் உக்கிரமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து, தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் தயார். ஜனாதிபதியை பரிதாபகரமான நிலைமைக்குள் தள்ள எதிர்பார்க்கவில்லை.

ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles