நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சி கோஷங்களை எழுப்பியது.
இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, எதிர்க்கட்சி தரப்பினர் கோ ஹோம் கோட்டா என கோஷமிட்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனால் ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒத்தி வைத்தார்.


