Thursday, April 23, 2026
25.6 C
Colombo
அரசியல்ராஜபக்ஷக்களை விரட்ட எதிரணிகள் ஒன்றுசேர வேண்டும் - சம்பிக்க

ராஜபக்ஷக்களை விரட்ட எதிரணிகள் ஒன்றுசேர வேண்டும் – சம்பிக்க

தற்போதைய நாட்டு நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நாட்டில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், நாமல் உட்பட ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில, ராஜபக்ஷ தரப்புக்கு தற்போது 69 இலட்சம் பேரின் ஆதரவு இல்லை. 3 வீதமான மக்கள்கூட அவர்களுடன் இல்லை.

எனவே, ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அவ்வாறு அவர் பதவி விலகி 24 மணிநேரத்துக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாய்ப்பை நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அனைத்து எதிரணிகளும் இதற்காக ஓரணியில் திரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles