நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.
மீனாவுக்கும் இவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது.
இதனால், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகரின் தாய் ராஜ் மல்லிகா மற்றும் மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.