Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
அரசியல்நாட்டுக்காக போராடியவர்கள் உள்ளே; வன்முறையை தூண்டிய ராஜபக்ஷக்கள் வெளியே - சஜித்

நாட்டுக்காக போராடியவர்கள் உள்ளே; வன்முறையை தூண்டிய ராஜபக்ஷக்கள் வெளியே – சஜித்

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்ஷக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுவதாகவும், இந்நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காக போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்று அவர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிக்கின்றன.

காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ஷ வாதம் மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிக்கின்றோம்.

வன்முறையைத் தூண்டிய ராஜபக்ஷக்கள் வெளியே சுதந்திரமாக உள்ளனர். ஆனால், நாட்டுக்காகப் போராடியவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.

இந்தக் கையாலாகாத அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமைத்துவம் எம்மால் வழங்கப்படும். அரசைத் தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles