Thursday, January 16, 2025
29.1 C
Colombo
அரசியல்டொலர் ஈட்டும் திட்டத்தை இரு வாரங்களில் முன்வைப்பேன் - தம்மிக்க MP

டொலர் ஈட்டும் திட்டத்தை இரு வாரங்களில் முன்வைப்பேன் – தம்மிக்க MP

டொலரை ஈட்டுவது தொடர்பிலான திட்டத்தை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தம்மிக்க பெரேரா MP தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர், அவர் தமது சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை சபாநாயகரிடம் கையளித்தார்.

யுத்த காலத்தின் போது, தாம் முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமையினால், தற்போது வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

தமக்கு இந்த உறுப்புரிமை கிடைத்தமைக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மூழ்கும் கப்பலில் தாம் ஏறி பயணிப்பதாக ஏனையோர் கூறினால், எனது பார்வையில் அவ்வாறு கப்பல் மூழ்கவில்லை. வேகமாக பயணிக்க கூடிய கப்பல் என்ற காரணத்தினாலேயே இந்த கப்பலில் ஏறியுள்ளேன்.

இதன்மூலம் தற்போதைய பிரச்சினைக்கு தம்மால் உரிய தீர்வொன்றை முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles