அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும், குழப்பம் அடையாமல் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு விடுத்த கோரிக்கையை அரச தலைவர் ஏற்றுக்கொண்டதுடன், அடுத்ததடுத்து இரண்டு தேர்தல்களுக்கு தயாராகுமாறும் அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 69 மில்லியன் மக்களின் ஆதரவு கொண்ட பொதுஜன பெரமுன கட்சியில் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு பதிலாக வேறு ஒரு கட்சியை சேர்ந்தவரை பிரதமராக நியமித்தமைக்கு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை எனவும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அது வரை பொறுமையாக செயற்பட்டு எந்த ஒரு தேர்தலையும் வெற்றி பெற கூடிய வகையில் பொதுஜன பெரமுனவை கிராமிய மட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மஹிந்தவை பதவி விலக வைத்து செய்த தவறு சரி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.