Friday, July 18, 2025
28.4 C
Colombo
அரசியல்Galleface போராட்டக்காரர்களின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது - முன்னாள் பிரதமர்

Galleface போராட்டக்காரர்களின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது – முன்னாள் பிரதமர்

காலிமுகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்படும் பொது மக்கள் போராட்டம் ஒரு வன்முறை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப உரையின்போதே அவர் நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் இரத்தக் கறை படிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த அமரகீர்த்தி அத்துகோரள பொது மக்கள் போராட்ட விடயத்தில் எவ்வித தவறும் செய்யவில்லை, அப்பாவியான ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் போராட்டம் அகிம்சையான போராட்டமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையானது ஜனநாயக ரீதியில் வாழ விரும்பும் மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டும் ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles