Saturday, September 21, 2024
31 C
Colombo
அரசியல்2048 இல் இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் - பிரதமர்

2048 இல் இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் – பிரதமர்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய இடைக்கால வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாம் நீண்ட கால இலக்குடன் பயணித்தால் 100 ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் 2048 ஆம் ஆண்டாகும்போது எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் அநாவசிய செலவுகளை நாம் முற்றாக இல்லாது செய்யவுள்ளோம். ஏனைய செலவுகளையும் நாம் மட்டுப்படுத்தவுள்ளோம்.

இதன் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள துறைகளை மீண்டும் மேலே கொண்டுவர முடியும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துவோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles