ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
- -2 வருடங்களுக்கு பதவி விலக மாட்டேன்.
- -அத்துடன், தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக போவதில்லை.
- -மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
- -நிதி நெருக்கடியை தீர்க்க அவதானம் செலுத்தியுள்ளேன்.
-யுத்தத்தில் வென்று நாட்டுக்கு ஆற்றிய சேவையை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கிறேன்.
-இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து பெரிய கடன்கள் கிடைக்கவுள்ளன.
-சர்வதேச நாணய நிதியத்திடம் 6 மாதங்களுக்கு முன்னரே சென்றிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
-இராணுவம் மற்றும் அரச சேவையாளர்களுக்கான ஒதுக்கம் குறைக்கப்படலாமே தவிர துண்டிக்க முடியாது.
-சலுகை வசதிகள் நிறுத்தப்பட வேண்டும் .
-முழுமையான அதிகாரம் இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கலாம் – அப்படி இல்லை என்றால் முழுமையாக வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமைக்கு சென்றுவிட வேண்டும்.