Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்வணிகம்ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விருது

ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விருது

February 2, 2022 – 6:00am

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதிநிதிகள் நிதியியல் பிரிவின் உதவி பிரதித் தலைவர் ருவன் ரொட்ரிகோ மற்றும் திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு உதவி முகாமையாளர் சச்சினி பண்டார ஆகியோர் 2021 CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

ஆயுள் காப்புறுதிப் பங்காளரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, 2021ஆம் ஆண்டின் ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கான CMA சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த 10 ஒன்றிணைந்த அறிக்கைகளைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வழங்கும் நிகழ்வை இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. சிறந்த நிதிப் பதிவுகளை பேணுவதுடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒன்றிணைப்பு ஆகிய பெறுமதிகளின் மீதான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு மீளஉறுதி செய்திருந்தது.

இந்த கௌரவிப்பு தொடர்பில் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் கல்வியகத்திடமிருந்து இந்த பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளமையை மாபெரும் கௌரவிப்பாக கருதுகின்றோம். நிதி அறிக்கையிடலில் யூனியன் அஷ்யூரன்சின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை கௌரவிப்பதாக அமைந்துள்ளது. கணக்கீட்டு செயன்முறைகள் மற்றும் நியமங்களை பின்பற்றுகின்றமைக்காக நாம் தொடர்ச்சியாக கௌரவிப்பைப் பெற்றுள்ளோம். யூனியன் அஷ்யூரன்ஸ் பின்பற்றும் வெளிப்படையான கணக்கீட்டு செயன்முறைகளை இந்த கௌரவிப்பு பிரதிபலிப்பதுடன், சிறந்த கூட்டாண்மை ஆளுகை கட்டமைப்பு மாதிரியை பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நிதி அறிக்கையிடலில் தொடர்ந்தும் சிறப்பை பதிவு செய்வதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்” என்றார்.

இலங்கையின் ஒட்டுமொத்த தனியார் மற்றும் பொதுநிறுவனங்களில் வருடாந்த அறிக்கைகளின் விபரமான மதிப்பாய்வுகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒன்றிணைந்த அறிக்கையிடல் சம்மேளனக் கட்டமைப்பினால் (IIRC) நிறுவனத்தினால் அதன் தந்திரோபாயம், ஆளுகை, வினைத்திறன் மற்றும் சௌபாக்கியமான அம்சங்களை கட்டியெழுப்பியுள்ளதுடன், நீண்ட காலம் நிலைத்திருக்கும் பெறுமதியை சகல பங்காளர்களின் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐயும் கொண்டிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles