Saturday, February 7, 2026
23.9 C
Colombo
அரசியல்நிர்மாணப் பணிகள் தாமதமானமை தொடர்பில் ஜப்பான் அரசிடம் முறையிடுவேன் - நிமல் சிறிபால டி சில்வா

நிர்மாணப் பணிகள் தாமதமானமை தொடர்பில் ஜப்பான் அரசிடம் முறையிடுவேன் – நிமல் சிறிபால டி சில்வா

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமானமைக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அவர், கட்டுமான நிறுவனங்களை ஜப்பான் அரசு தேர்வு செய்ததாகவும், எனவே ஜப்பான் அரசிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த முனையங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ள போதிலும் அது சாதகமான நிலையை எட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles