20 ஆம் திருத்தச்சட்டத்துக்கு வாக்களித்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நேற்று (01) இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாகவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.