தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 6 கட்சிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியின், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி முதலான 6 கட்சிகளும், தமிழக முதல்வரை சந்திக்க முயற்சிப்பதாக அறியமுடிகிறது.
முன்னதாக, ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் – இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பில் குறித்த 6 கட்சிகளும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தன.
இந்நிலையில், இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில், குறித்த 6 கட்சிகளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு முயற்சிப்பதாக, அந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், இந்த சந்திப்பு தொடர்பில் இதுவரையில் இறுதியான முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.