Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்க அமைச்சர்கள் குழுவை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

ஜனாதிபதி இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஆணைக்கு அமைய செயற்படுவது தமது நிர்வாகத்தின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரஜைகள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார்

தனது தலைமையின் கீழ், சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும், சிறுவர் வறுமை மற்றும் போசாக்குக் குறைபாட்டை ஒழிப்பது போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து விசேட தேவையுடையவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சனைகள் இங்கு முக்கியமாக விவாதிக்கப்பட்டன. மக்கள் வழங்கிய ஆணையின் பெரும்பகுதியான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்

செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவன கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி சர்வதேச நாணய நிதிய குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நிதியமைச்சராக ஜனாதிபதி, தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

உயர்தரப் பரீட்சை பரீட்சை தொடர்பான வகுப்புக்களுக்கு தடை

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள்...

Keep exploring...

Related Articles