Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற செயலமர்வு குறித்து வௌியான தகவல்

பாராளுமன்ற செயலமர்வு குறித்து வௌியான தகவல்

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 2 தகவல் கூடங்கள் நாடாளுமன்றத்தில் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 25, 26, 27 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் குறித்த மூன்று நாள் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூடும் முதல் நாளில், அவையின் முக்கியப் பொறுப்பு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

வழமையான மரபின்படி, சபாபீடத்தில் உரிய இடத்தில் செங்கோலை வைத்த பின்னர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் திகதி மற்றும் நேரம் குறித்த ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பொதுச்செயலாளரினால் சபையில் முன்வைக்கப்படும்.

பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64(1) மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5, மற்றும் 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப்பிரமாணம், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.

அதன்பிறகு, சபையின் பணிகளைத் தொடர சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பிமல் ரத்நாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்

தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை நாளை (18) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள்...

Keep exploring...

Related Articles