பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட
சமந்த வித்தியாரத்ன – 208,547 ,
கிட்ணன் செல்வராஜ்- 60,041,
அம்பிகா சாமுவேல்- 58,201,
ரவிந்து அருண பண்டார – 50,822,
சுதத் பலகல்ல- 47,980,
தினிது சமன்குமார- 45,902
என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட
நயன பிரியங்கர வாசலதிலக்க- 35518,
சமிந்த விஜயசிறி – 29791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட
சாமர சம்பத் தசாநாயக்க -19359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.