Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரலாற்று சாதனை படைத்த ஐக்கிய மக்கள் சக்தி

வரலாற்று சாதனை படைத்த ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியும்.

இலங்கை முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 31 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 6 ஆசனங்களை, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களை, முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

Keep exploring...

Related Articles