எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் ஊடகங்கள் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் தினம் வரை அமைதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்
அதேபோன்று வேட்பாளர்களின் இல்லங்களில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். இல்லையேல் தேர்தல் சட்டத்துக்கு அமைய அவை அனைத்தும் அகற்றுவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
