Wednesday, August 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணைகள் தபால் மூலமும் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18ஆம் தேதி முதல் https://www.doenets.lk/ என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

நுழைவுச் சீட்டில் பாடம், ஊடகம் மற்றும் பெயர் திருத்தங்கள் தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையதளத்தின் மூலம் உரிய திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நவம்பர் 18 நள்ளிரவு 12.00 வரை செயற்பாட்டில் இருக்குமெனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles