Thursday, November 14, 2024
26.5 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதற்கமைய ட்ரம்ப் 198 இடங்களையும் கமலா ஹாரிஸ் 109 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

OTT வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை

அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தால் அப்படத்தின் ஓடிடி வௌியீட்டை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெய்ண்ட மீவிஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு...

Keep exploring...

Related Articles