Tuesday, March 24, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று (01) காலை 7.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles