20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணிக்கான வீரர்களின் பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே, வனிது ஹசரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்க, அசித பெஃர்னாண்டோ, டில்சான் மதுஷங்க மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது