Thursday, January 9, 2025
32 C
Colombo
சினிமாபிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

பாலியல் குற்றசாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். ‘செல்லம்மா செல்லம்மா, மேகம் கருக்காதா, அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவாலய்யா’ என பல வெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் 21 வயதான நடன பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெலுங்கானா மாநிலத்தில் ராய்துர்கம் பொலிஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஜானி மீது, 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் 2019 இல் இருந்தே அந்த பெண் நடன இயக்குநர் சங்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசமயம் அவர் மைனர் பெண்ணாக இருந்ததால் ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவானது.

இந்த புகார் எதிரொலியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தலைவராக இருந்து வந்த தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் அசோசியேஷன் பதவியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜானி இன்று (19) பெங்களூரில் வைத்து சிறப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles