Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
சினிமா'விக்ரம்' படப்பிடிப்பு காணொளி வெளியானது!

‘விக்ரம்’ படப்பிடிப்பு காணொளி வெளியானது!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு காணொளியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விக்ரம்’ திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் கடைசி காட்சியில் பகத் பாசில் துப்பாக்கியால் சுடும் காட்சியின் காணொளியையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் சந்தோஷத்தை வெளிப்படுத்திய காட்சியையும் அவர் அந்த காணொளியில் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 110 நாட்கள் நடைபெற்றதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஏப்ரல் 28ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles