நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதேரி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் திருமண புகைப்படங்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
சித்தார்த்தும், அதிதியும் கடந்த 2021 ஆம் ஆண்டு ‘மஹா சமுத்திரம்’ படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று இருவரும் தெலுங்கானாவில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அதுகுறித்த புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
அந்த பதிவில்இ ‘நீ என் சூரியன்இ என் சந்திரன் மற்றும் நீதான் எனது எல்லா நட்சத்திரங்கள்” என்று காதல் ரசம் பொங்கஇ சித்தார்த் அதிதியின் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.