யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மேற்படி யுவதி நேற்று மதியம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
வெளியே சென்றவர்கள் வீடு திரும்பிய வேளை அந்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.