இந்த தேர்தலில் வேறு யாரேனும் வெற்றி பெற்றால் இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் மீண்டும் முதல் இருந்து அனைத்தையும் ஆரம்பிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அனுராதபுரம் மேற்குத் தொகுதியில் நேற்று (28) இடம்பெற்ற பிரதேச குழுக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.