உலகில் முன்னேறிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வித்தியாசமான ஆட்சி அமைப்பதே மக்கள் மற்றும் ஆட்சியாளரின் இலக்காக இருந்தால் அனைவரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒன்றிணைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மாலம்பே நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தடவையாக மக்கள் தேர்தலை கோரியுள்ளதாகவும், பெருந்தொகையான மக்கள் திசைகாட்டி பக்கம் திரும்பியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து மக்களின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம் என தெரிவித்த அவர், முன்னணி அரசாங்கத்தின் கீழும் மக்களின் நம்பிக்கையை உடைக்க மாட்டோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை வளமான நாடாக மாற்றி மற்றவர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வளமான அரசை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.