Wednesday, January 15, 2025
25.8 C
Colombo
வடக்குயாழில் மூன்று யுவதிகள் கைது

யாழில் மூன்று யுவதிகள் கைது

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து யுவதிகள் கைதானதாக கூறப்படுகின்றது.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.

அதன் போது , விடுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன் , தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.

கைதான யுவதிகள் யாழ் . நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் கைதான யுவதிகள் மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles