தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இந்த நியமனம் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.