Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்வணிகம்NLP மூன்றாம் நிலைக்கல்வி அரங்கில் புதிய தளத்தை உருவாக்குகிறது

NLP மூன்றாம் நிலைக்கல்வி அரங்கில் புதிய தளத்தை உருவாக்குகிறது

February 3, 2022 – 5:28pm

பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம்

NLP நிறுவனத்தின் திட்டங்கள், புதுமையான சட்டங்கள் சமகால அதி நவீன மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி அரங்கில் புதிய தளத்தை உருவாக்குகிறது என்று பேராசிரியர் எஸ். சந்திரசேகரம் தெரிவித்தார்.

NLP பயிற்சி நிறுவனத்தின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,..

இந்த நிறுவனம் நடத்தும் NLP திட்டங்கள் தற்போது சமூகத்தை பாதிக்கும் மற்றும் தேவையற்ற ஆரோக்கியம், நடத்தைகளான பயம், அடிமையாதல், குடும்பம், வேலை, மோதல்கள், சமநிலை தவறுதல், தூக்கக் கோளாறுகள், பதற்றம் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி NLP பயிற்சி நிறுவனமான Institute of Hypnosis and NLP Lanka (IHNLP) தனது விருது வழங்கும் விழா சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி, கொழும்பு 07வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக Esoft metro campus  உபவேந்தரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம், கெளரவ அதிதியாக தலைவர் கைத்தொழில் அமைச்சு தேசிய வடிவமைப்பு நிலையம் அஜித் ஜயவர்தன, MD &CEO பிரிட்ஜ் டு பிரிட்ஜ் சொலூசன் முதன்மை செயல்வினை ஸ்பீன்கேர் இன்டர்நேஷனல் அலுவலர் பிரசன்ன விஜயசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த சான்றிதழ் வழங்கும் விழாவின் போது சான்றளிக்கப்பட்ட NLP பயிற்சியாளர் மற்றும் முதுநிலை பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles