Wednesday, January 15, 2025
30 C
Colombo
ஏனையவைஅத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.

இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles