பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (26) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபரே இன்னமும் பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்கின்றார் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.