ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தற்காலிகமாக விலகியுள்ளார்.
சுகயீனம் காரணமாக அவர் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ நியமனம் இன்று பிற்பகல் 2 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது